இலங்கை

பதில் அமைச்சர்கள் நால்வர் நியமனம்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பதில் அமைச்சர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகங்களுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்திற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…