No products in the cart.
ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் தற்போது நிறைவடைந்துள்ளது.
நேற்று (18) நள்ளிரவுடன் வேலைநிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
ரயில்வே பொது முகாமையாளரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுமேத சோமரத்ன மேலும் தெரிவித்தார்.














