இலங்கை

மகாவலி தாழ்நிலப்பகுதியில் சிறிய வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை!

மகாவலி கங்கையைச் சூழவுள்ள மேலும் பல பிரதேசங்களுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, கங்க இஹள கோரளை, உடபலாத்த, தொலுவ, உடநுவர, யடிநுவர, கங்கவட்ட கோரளை, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்பர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து அவதானம் செலுத்தி, அப்பகுதிகளைச் சூழ வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அங்குள்ள வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…