22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது. நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த ஒகஸ்ட் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி பல்வேறு தரப்பினரால் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், அதற்கமைய தாக்கல் செய்யப்பட்ட மொத்த மனுக்களின் எண்ணிக்கை 67 ஆகும்.
- Home
- 22 தொடர்பில் நீதிமன்றின் தீர்மானத்தை இன்று அறிவிக்கிறார் சபாநாயகர்
22 தொடர்பில் நீதிமன்றின் தீர்மானத்தை இன்று அறிவிக்கிறார் சபாநாயகர்
-
By me24tamil - 0
- 0

Related Content
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு
By me24tamil 46 minutes ago -
நாட்டின் பல இடங்களில் 100 மிமீ கன மழைக்கு வாய்ப்பு
By me24tamil 47 minutes ago -
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதில் தலைவர் நியமனம்
By me24tamil 47 minutes ago -
21 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது
By me24tamil 48 minutes ago -
நுவரெலியா மற்றும் ஹட்டனில் 13 பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
By me24tamil 24 hours ago -
மனச்சோர்வை குறைக்க புதிய ‘Brain Stimulation Headset’ ; அமெரிக்காவில் புதிய சாதனம் அறிமுகம்
By me24tamil 24 hours ago