இலங்கை

நாட்டின் பல இடங்களில் 100 மிமீ கன மழைக்கு வாய்ப்பு

இலங்கைக்கு வடகிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தாழமுக்கமாக வலுவடைந்து நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து தீவிர தாழமுக்கமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் இல்லை என்ற போதிலும், அத்தொகுதியை நோக்கி வீசும் காற்று ஓட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் இன்று (22) அதிகாலை வௌியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…