No products in the cart.
நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி பலி – மற்றையவர் மாயம்
கித்துல்கலை, மன்னகெட்டிய நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் காணாமல்போயுள்ளார்.
நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட பொலிஸார், காணாமல்போன நபரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ‘அத தெரண’வுக்குத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கித்துல்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














