இலங்கை

முன்னாள் ஜனாதிபதியை நேரில் சந்தித்த புதிய சீனத் தூதுவர்

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்வது குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன், இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் உலகளாவிய சூழ்நிலைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. தாம் ஜனாதிபதியாகப் பணியாற்றிய காலத்தில் பேணப்பட்ட இராஜதந்திர உறவுகள் மற்றும் சீனாவுடனான நினைவுகளை மைத்திரிபால சிறிசேன இதன்போது நினைவு கூர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவும் ஒத்துழைப்பும் மேலும் வலுவடையும் என எதிர்பார்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…