No products in the cart.
அரசு சூரிய சக்தியை இல்லாது ஒழிக்க திட்டம் ஒன்றை முன்னெடுக்கிறது?
நமது நாட்டின் வலுச்சக்தி கொள்கை தொடர்பில் பொதுவான ஒரு அங்கீகாரமாக, உச்சக்கட்டமாக ஆற்றல் உற்பத்தியானது புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியாக அமைந்து பாணப்பட வேண்டும் என்றபோதிலும், தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்த வேளை வலுச்சக்தி பற்றிப் பேசுகையில் 100% புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி பற்றி குறிப்பிட்டது. ஆனால், ஆட்சியமைத்ததும் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியைப் புறந்தள்ளிவிட்டு, எரிபொருள் மற்றும் அனல் மின் உற்பத்தி நிலைய மாபியாவின் கமிஷன்களுக்கு அடிபணிந்து போயுள்ளது. இதனால் நிலையான ஆற்றல் மற்றும் சூரிய சக்தியை முற்றிலுமாகக் குழிதோண்டிப் புதைக்கும் கொள்கையை வகுத்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அண்மையில், வலுச்சக்தி அமைச்சின் செயலாளர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடிவொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில், நெட்-மீட்டரிங் (Net Metering) மற்றும் நெட்-அக்கவுண்டிங் (Net Accounting) ஆகியவற்றை நீக்கிவிட்டு ‘நெட்-ப்ளஸ்’ (Net Plus) முறையைச் செயற்படுத்துமாறு சட்டவிரோதமானதொரு ஆலோசனையை வழங்கியுள்ளார். அவ்வாறான ஆலோசனையை வழங்குவதற்கு அமைச்சின் செயலாளருக்கு எத்தகைய அதிகாரமும் கிடையாது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மக்கள் மத்தியில் சென்று கருத்துக்களை கேட்டு மாத்திரமே இதனை மேற்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சூரிய சக்தி துறையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட இத்துறைசார் பங்குதாரர்களுடன் எதிர்க்கட்சித் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இன்று பல்வேறு காரணங்களை முன்வைத்து சூரிய சக்தியை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பகலில் மலிவான விலையில் மின்சாரத்தைப் பெற்றுக்கொண்டு இரவில் அதிக விலைக்குக் கொள்வனவு செய்யும் முறைக்குள் போலியான தரவு மையவாத வாதமொன்றை முன்வைக்க முயல்கின்றனர். சூரிய சக்தி வல்லுநர்கள் இந்த வாதங்கள் பொய்யானவை என தர்க்கரீதியாக நிரூபித்துள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.















