இலங்கை

மாதம்பையில் கோர விபத்து: இரு சிறுவர்கள் பலி – தாய் பலத்த காயம்

மாதம்பை – குளியாப்பிட்டிய வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதுடன் அவர்களின் தாய் பலத்த காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்சார தூணில் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் தும்மலசூரிய – வீரகொடியானை பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 11 வயதுடைய இரு ஆண் பிள்ளைகளாவர். காயமடைந்த தாய் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…