No products in the cart.
சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: ஒன்டாரியோ பொலிஸ் அதிகாரி மீது வழக்கு
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையை அடுத்து, கனடாவின் ஒன்டாரியோ மாகாண பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.பல மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் சந்தேகநபரின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தினர்.ஒன்டாரியோவின் அலிஸ்டன் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையின் போது, பல மின்னணு சாதனங்களை பொலிஸார் கைப்பற்றினர்.















