இலங்கை

உதய கம்மன்பில நிரபராதியாக கருதி விடுதலை!

அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட இந்தத் தீர்ப்பை வழங்கினார். தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதியான உதய கம்மன்பிலவுக்கு எதிராக முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார். இதற்கமையவே அவர் விடுவிக்கப்பட்டதாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய தொழிலதிபரான பிரையன் ஷாடிக் (Brian Shaddick) என்பவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை போலி அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி விற்பனை செய்து 21 மில்லியன் ரூபாய் நிதி மோசடி புரிந்ததாகக் கூறி, கடந்த ‘நல்லாட்சி’ அரசாங்கக் காலத்தில் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…