No products in the cart.
டொராண்டோவில் எரியும் காருக்குள் மீட்கப்பட்ட இரண்டாவது நபர்
அடையாளம் காணப்பட்டார்! கனடாவின் டொராண்டோ நகரில் வெவ்வேறு இடங்களில் எரியும் வாகனங்களுக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட இருவரில், இரண்டாவது நபரின் அடையாளத்தை டொராண்டோ பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.அடையாளம் காணப்பட்ட நபர் 30 வயதான முகமது கேரே ஆவார். டொராண்டோ நகரின் இருவேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற கார் தீவிபத்துச் சம்பவங்கள் குறித்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.செப்டம்பர் 21 அன்று இரவு 11:30 மணியளவில், டொராண்டோ உயிரியல் பூங்காவிற்கு வடக்கே ‘ஸ்டீல்ஸ் அவென்யூ ஈஸ்ட்’ மற்றும் ‘ரீசர் வீதி’ அருகே உள்ள ஒரு மைதானத்தில் கார் ஒன்று எரிவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.















