No products in the cart.
கனடிய கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் எட்சிகன் பதவி விலகினார்
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்காட் எட்சிகன் இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது நாடாளுமன்றப் பதவி விலக உள்ளதாக அவரைச் சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதன் மூலம், கடந்த ஓராண்டிற்கும் குறைவான காலத்தில் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரெவின் நாடாளுமன்றக் குழுவிலிருந்து வெளியேறும் 8ஆவது உறுப்பினராக அவர் மாறவுள்ளார்.சுமார் 30 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றி வரும் எட்சிகன், பிற வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் நோக்கில் தனது பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.















