No products in the cart.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்: அவதியுறும் டொராண்டோ பெண்
கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண்ணொருவரின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ‘மெட்டா’ நிறுவனம் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிரந்தரமாக முடக்கியுள்ள நிலையில், அதற்குத் தீர்வு காண மனித அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முடியாமல் சாட்பாட்களுடன் மட்டுமே உரையாட முடிகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.ஜேஸ்மின் ஆல்ட் எனும் அந்தப் பெண், கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி தனது கணக்குகள் நீக்கப்பட்டதிலிருந்து மெட்டா நிறுவனத்தின் எந்தவொரு பிரதிநிதியையும் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.இதன்போது அவரது 20 ஆண்டுகள் பழமையான ஃபேஸ்புக் கணக்கு, 2011 ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் தனது வளர்ப்பு நாய்க்காகப் பராமரித்து வந்த இன்ஸ்டாகிராம் கணக்கு ஆகியவையே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.















