இலங்கை

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில், ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தற்போது சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் மற்றும் கடற்போக்குவரத்துத் தடைகள் காரணமாக இக்கப்பல்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதோடு, சில கப்பல்களில் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சீனாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த, ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 காலியான எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இலங்கை கடலோரப் பகுதிக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளன. ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு ஆதரவளிக்கும் தரப்பினருக்கு எதிராக அமெரிக்கா கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதன் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…