இலங்கை

ஹெரோயினுடன் 14 பேர் கைது

ஹெரோயின் போதைப்பொருளுடன் 14 பேரை ஹிங்குரக்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹிங்குரக்கொடை தலைமையக பொலிஸாரும் ஹிங்குரக்கொடை விமானப்படை அதிகாரிகளும் இணைந்து நேற்று (02) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 09 பேர் மின்னேரியா பகுதியையும், மூவர் ஹிங்குரக்கொடை பகுதியையும், இருவர் மெதிரிகிரிய பகுதியையும் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 10 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான 13 இளைஞர்கள் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிரதான சந்தேகநபர் ஹிங்குரக்கொடை, ஹய கணு வபகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு, அவர் வட்ஸ்அப் மூலமாக நபர்களை இனங்கண்டு ஹெரோயின் விற்பனை செய்து வந்த பாரியளவான கடத்தல்காரர் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (03) ஹிங்குரக்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…