No products in the cart.
கனடா பாரி நகரில் பொலிஸாரின் அதிரடி போதைப்பொருள் சோதனை: 9 பேர் கைது!
கனடாவின் பாரி நகரின் மையப்பகுதியில் வியாழக்கிழமை இரவு பொலிஸார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு முன்னர், பாரி நகர மையப்பகுதியில் அமைந்துள்ள மேப்பிள் அவென்யூ மற்றும் டன்லப் ஸ்ட்ரீட் வெஸ்ட் சந்திப்பிற்கு அருகே பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.சோதனையின் போது துப்பாக்கிச் சூடு போன்ற பலத்த சத்தங்கள் கேட்டதாகப் பொதுமக்கள் அச்சம் வெளியிட்டிருந்தனர்.















