இலங்கை

அஹுங்கல்ல கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர்

அஹுங்கல்ல, வெலிகந்த பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்த நிலையில், அதற்கமைய நேற்று (07) மாலை சந்தேகநபர் வெலிகந்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவரது வீட்டில் புதைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டையொன்றை விசாரணை அதிகாரிகள் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர் வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞராவார். சம்பவம் தொடர்பாக அஹுங்கல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…