இலங்கை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பாராளுமன்றத்துக்கு!

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சபாநாயகருக்கு எதிரான 49 குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற நடைமுறைகளைக் கையாளும்போது சபாநாயகர் பின்பற்றிய சார்புநிலை மற்றும் ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகள் காரணமாக அவர் அந்தப் பதவிக்கு தகுதியற்றவர் எனக் குற்றம் சாட்டியே எதிர்க்கட்சியினரால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது. தமது கட்சி இதற்கு முன்னர் சமர்ப்பித்த சிறப்புரிமைப் பிரச்சினைகள் மற்றும் பிரேரணைகளை எவ்வித நியாயமான காரணமும் இன்றி சபாநாயகர் நிராகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியும் குற்றம் சுமத்தியுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…