இலங்கை

சந்திம வீரக்கொடி மற்றும் சாமர சம்பத் இலஞ்ச ஊழல் ஆணை

முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இன்று (12) இஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளனர். முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, தற்போது இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். அதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய, பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை ஆணைக்குழுவில் முன்னிலையானார்.முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…