No products in the cart.
ஒன்டாரியோவில் விமானம் விபத்து; இரண்டு விமானிகள் பலி
கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், பெர்குஸ் நகருக்கு அருகில் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற சிறு ரக விமான விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.பெர்குஸ் மற்றும் ஆர்தர் பகுதிகளுக்கு இடைப்பட்ட பீட்டி லைன் மற்றும் வெலிங்டன் சாலை 17 சந்திப்புக்கு அருகில் காலை 10 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.விமானம் சோளக்காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளாகித் தீப்பற்றியுள்ளது.















