இலங்கை

அமெரிக்கா செல்ல எதிர்பார்ப்போருக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் முக்கிய எச்சரிக்கை!

அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய எதிர்பார்ப்பவர்களுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் விசேட மற்றும் முக்கியமான அறிவித்தலையொன்றை வெளியிட்டுள்ளது. பயணத் தடங்கல்கள் அல்லது அவசர மருத்துவத் தேவைகள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காக, பயணச் செலவுகளை முழுமையாக ஈடுசெய்வதற்குப் போதுமான நிதி வலிமை இருப்பதை உறுதிசெய்து கொள்ளுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விசா நேர்காணலுக்குச் சிறந்த தயார்படுத்தலுடன் சமூகளிக்குமாறும், அமெரிக்காவிற்குள் நுழைந்த பின்னர் அந்நாட்டு அரசாங்கத்தின் பொது நலன்புரி உதவிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்பதற்கான உண்மையான சான்றுகளைச் சமர்ப்பிக்கத் தயாராகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டாம் எனத் தீவிரமாக எச்சரிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களைச் சமர்ப்பிப்பது ஒரு பாரிய மோசடியாகும் என்பதுடன், இதனால் தற்போதைய விசா உரிமையை இழப்பதுடன், எதிர்காலத்தில் எப்போதுமே அமெரிக்க விசாவைப் பெறுவதற்கு நிரந்தரமாகத் தகுதியற்றவராகும் நிலை ஏற்படும் என்றும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…