இலங்கை

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உயரிய பாராட்டு!

சர்வதேச நாணய நிதியம் (IMF) எப்போதும் இலங்கைக்கு அர்ப்பணிப்புடன் கூடிய நம்பகமான பங்காளியாகத் தொடர்ந்து இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் திணைக்களத்தின் துணைப் பிரிவுத் தலைவர் சோனாலி ஜெயின் சந்திரா தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் வருடாந்த கூட்டத்திற்கு இணைவாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் குறித்து விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது இலங்கை தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “இலங்கையின் பொருளாதார நிலைமை தற்போது மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நிதிச் செயற்பாடுகள் மிகவும் வலுவாக உள்ளன. வருமான விகிதம் இரட்டிப்பாகியுள்ளது. கடன் மறுசீரமைப்பும் பெரும்பாலான பகுதி நிறைவடைந்துள்ளது. தொடர்ச்சியாக 11 காலாண்டுகளாக பொருளாதார வளர்ச்சி நேர்மறையான (Positive) மட்டத்தில் காணப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…