இலங்கை

பல இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் நால்வர் கைது


கட்டுநாயக்க விமான நிலையத்தில் 600 இலட்சம் ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்டுகளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். எமிரெட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாயிலிருந்து சந்தேகநபர்கள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர். கொழும்பு வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, பம்பலப்பிட்டிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நால்வரும் விமான நிலையத்தை விட்டு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வெளியேற முயன்றதைத் தொடர்ந்து அவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களின் 20 பைகளில் இருந்த சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…