உலகம்

வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் அமெரிக்க ஜனாதிபதி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மே 13 ஆம் திகதி வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஓவல் அலுவலகத்திற்குத் திரும்பிய பிறகு அவர் மேற்கொள்ளவுள்ள முதல் பெரிய வெளிநாட்டுப் பயணமாக இந்தப்பயணம் குறிப்பிடப்படுகிறது.

பயணத்தின் போது, ​​அவர் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டாரில் தங்குவார் என்றும் கூறப்படுகிறது.

ரியாத்தில், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நடத்தும் வளைகுடா ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் ட்ரம்ப் கலந்து கொள்வார்.

இதுவேளை இச்சந்திப்பின் போது அமெரிக்க பொருளாதாரத்திற்கான புதிய முதலீடுகளை பெற்றுக்கொள்வது குறித்த விடயங்களில் கவனம் செலுத்தவுள்ளதாகவும்.

தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தனது மூன்று நாள் சுற்றுப்பயணத்தை முடிப்பதற்கு முன்பு கட்டாரில் நடைபெறும் வளைகுடாத் தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…