இலங்கை

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்குப் பின்னர்,பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்வதற்கான பாதுகாப்புக் கூட்டத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகித்தார்.

எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான விழிப்புணர்வையும் வலுவான பதிலடியையும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புப் படைத் தலைவர்,
ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தானின் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.

பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்குமாறு பிரதமர் மோடி முப்படைத் தலைவர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…