இலங்கை

புதிய வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சி!

அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அரசாங்கம் அதிகளவான வரி விதித்துள்ளமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன விற்பனையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

செல்வந்தர்கள் பயன்படுத்தும் அதிசொகுசு வாகனங்கள் வழமை போன்று விற்பனையாகும். ஆனால் மத்திய தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் வாகனங்களின் விற்பனை பாரியளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனால் வாகன இறக்குமதி மூலமாக அரசாங்கம் எதிர்பார்த்த வரி வருமானம் கிடைக்காமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…