No products in the cart.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனிற்கு புற்றுநோய்!
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
புற்றுநோய் அவரது எலும்புகளிற்குள் பரவியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளிற்காக மருத்துவரை பைடன் வெள்ளிக்கிழமை சந்தித்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவபரிசோதனையில் அவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
அதேவேளை பைடன் மிகவும் வேகமாக பரவக்கூடிய புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.