விளையாட்டு

வெற்றிக் கொண்டாட்ட உயிரிழப்புகள்… விராட், அனுஷ்கா ஜோடி இன்ஸ்டாவில் வருத்தம்

பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஐபிஎல் வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு அணி வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “வார்த்தைகளை இழந்து நிற்கிறேன். முற்றிலும் மனமுடைந்து போனேன்” என்று குறிப்பிட்டு அந்த அணி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையை பகிர்ந்துள்ளார்.

கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும், அவருடைய இன்ஸ்டாகிராமில் அந்த அறிக்கையை பகிர்ந்து, உடைந்து போன இதயத்தின் எமோஜியை வெளியிட்டு உள்ளார்.

இதேபோன்று, பெங்களூரு அணியின் முன்னாள் வீரரான டி வில்லியர்சும், எக்ஸ் தளத்தில் வருத்தியுள்ளார்.

முன்னதாக உயிரிழப்புகள் ஏற்பட்டபோதும், மைதானத்தினுள்ளே வெற்றி கொண்டாட்டத்தை பெங்களூரு அணி தொடர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…