இலங்கை

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

நல்லாட்சி அரசாங்க காலத்தில் மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவிற்கு எதிராக இன்று (06) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சந்திராணி பண்டார, அமைச்சராக இருந்தபோது சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், உலர் மண்டல மேம்பாட்டு அமைச்சின் திட்ட இயக்குநராக எச்.எம். சந்திரவன்சவை நியமித்ததாகவும், சட்டவிரோதமாகத் தனது நண்பர்களைப் பல்வேறு பதவிகளுக்கு நியமித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ‘ஊழல்’ குற்றத்திற்காக முன்னாள் அமைச்சருக்கு எதிராக இந்தக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

அதன்படி, குற்றப்பத்திரிகை மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்திகே முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பிரதிவாதி தலா ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…