விளையாட்டு

அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் இந்திய முன்னணி வீரர் ஓய்வு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பியூஷ் சாவ்லா (வயது 36) அனைத்து வடிவிலான (டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐ.பி.எல்.) கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் 2007 டி20 உலகக்கிண்ணம் மற்றும் 2011 ஒருநாள் உலகக்கிண்ணம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.

விளையாடிய கால கட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட அவர் இளம் வீரர்களின் வருகையால் அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2012-ம் ஆண்டு விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. ஐ.பி.எல். தொடரில் மட்டுமெ விளையாடி வந்தார்.

இத்தகைய சூழலில் அவர் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் அதில் 43 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

மேலும் 192 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 192 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…