சினிமா

விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் – ஸ்தலத்திலேயே தந்தை பலி

தருமபுரி அருகே நிகழ்ந்த வாகன விபத்தில் மலையாள நடிகரின் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஷன் டாம் சாக்கோ. இவர், கேரளாவை இருந்து பெங்களூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

தருமபுரியின் பாலக்கோடை அடுத்த பாறையூர் அருகில் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் லொறி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

மேலும், நடிகர் சைன் டாம் சாக்கோ மற்றும் அவரது சகோதரர் படுகாயத்துடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் டாம் சாக்கோ அண்மையில் போதைப் பொருளை பயன்படுத்தி, நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

உண்மை சம்பவமா?

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் செம ஹிட்டடித்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி.3 ஆவது வாரத்தை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடி வசூலைத் தாண்டி செம கலெக்ஷன் செய்து வருகிறது. டூரிஸ்ட் பேமிலி படத்தை தொடர்ந்து சசிகுமார்…