கனடா

கனடாவில் குடியிருப்பில் நச்சு வாயு கசிவினால் வெளியேற்றப்பட்ட மக்கள்

கனடாவின் நோர்த் யார்க் பகுதியிலுள்ள கெலி ஸ்ட்ரீட் Keele Street-இல் அமைந்த ஒரு குடியிருப்பு கட்டடத்தில் அதிக அளவிலான கார்பன் மொனொஆக்சைடு கண்டறியப்பட்டதை அடுத்து, கட்டடத்தில் உள்ள மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

டொரொன்டோ தீயணைப்பு துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவம் வியாழக்கிழமை காலை 4 மணியளவில் ஏற்பட்டது. அந்த இடத்தில் தங்கியிருந்த ஒரு பெண் அதிர்ச்சியடைந்ததாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்பு துறையினர் இதற்கான காரணத்தை இன்னும் விசாரித்து வருகிறார்கள். தொடக்க அறிக்கைகளின்படி, கட்டடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு இயந்திர கோளாறு காரணமாக இந்த கசிவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தீயணைப்பு மற்றும் அவசர சேவை குழுக்கள் பொதுமக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

வீட்டிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் தீவிர ஆனால் உயிருக்கு ஆபத்தில்லாத நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…