இலங்கை

மாத்தறை – மித்தெனிய வீதியில் வாகன விபத்தில் ஒருவர் பலி!

திஹகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தறை மித்தெனிய வீதியின் ஹொரொன்தூவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹக்மன பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

யடியன பிரதேசத்தில் வசித்து வந்த 40 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஹகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…