விளையாட்டு

WTC 2025 இறுதிப்போட்டி – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது, இதில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்கா அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் மிச்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ககிசோ ரபாடா 4 விக்கெட்டுக்களையும் மற்றும் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, தென்னாபிரிக்கா அணிக்கு 282 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…