இலங்கை

மாநகர சபை உள்ளிட்ட மேலும் 3 சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றிய NPP

தேசிய மக்கள் சக்தி இன்று (16) மற்றுமொரு மாநகர சபை மற்றும் இரண்டு பிரதேச சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.

அதன்படி, இரத்தினபுரி மாநகர சபையின் அதிகாரத்தையே இவ்வாறு தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

இரத்தினபுரி மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் கே.ஏ.டி.ஆர்.ஐ. கட்டுகம்பல 14 வாக்குகளைப் பெற்று மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சி மேயர் வேட்பாளர் 12 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

அதேபோல், தம்புள்ளை மற்றும் கல்பிட்டி பிரதேச சபைகளின் அதிகாரமும் தேசிய மக்கள் சக்தி வசமானது.

தம்புள்ளை பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் கட்சியின் டபிள்யூ.எம். திலகரத்ன இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அவர் 15 வாக்குகளைப் பெற்றார்.

எதிர்க்கட்சியில் இருந்து இரண்டு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர், அதில் பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் 6 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் 5 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

கல்பிட்டி பிரதேச சபையின் தலைவராக தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் முகமது ரிக்காஸ் இன்று நியமிக்கப்பட்டார்.

இன்று காலை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் 16 வாக்குகளைப் பெற்றதோடு, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட மொஹமட் ஆசிக் 15 வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…