No products in the cart.
கனடா பிரதமர் – இந்திய பிரதமர் சந்திப்பு
கனடா பிரதமர் மார்க் கார்னியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
பயணத்தின் முதல் நாடாக அவர் கடந்த 15ம் திகதி சைப்ரஸ் நாட்டுக்குச் சென்றார். அங்கு அந்நாடு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.
கனடா பிரதமர் – இந்திய பிரதமர் சந்திப்பு | Canadian Prime Minister Modi Meeting
இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் செவ்வாய்க்கிழமை (17) நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்த மாநாட்டில் கனடா பிரதமர் மார்க் கார்னியை சந்தித்துள்ளார். அத்துடன், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை இந்திய பிரதமர் மோடி சந்தித்துள்ளார். கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா நாட்டுக்கு புறப்பட்டுள்ளார்.