No products in the cart.
டால்ஃபின்களை பின்தொடர்ந்த கனடா நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை
வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை மீறியமைக்கு கனடாவில் ஒருவர் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பிய British Columbia மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மைக்கேல் வைட் என்பவர், டால்ஃபின்களை மிகவும் அருகில் பின்தொடர்ந்து வீடியோ எடுத்த சம்பவம் தொடர்பாக 5,000 கனேடிய டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடல் விலங்குகள் தொடர்பான எந்தவொரு பதிவையும் சமூக ஊடகங்களில் வெளியிட முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டால்ஃபின்களை பின்தொடர்ந்த கனடா நபருக்கு விதிக்கப்பட்ட தண்டனை | 5K Fine Jet Skier Who Got Too Close To Dolphins
2022 ஆகஸ்டில், பிரிட்டிஷ் கொலமபிய மாகாணத்தின் போர்ட் மெக்நீல் அருகே உள்ள புரொக்டொன் ஸ்ட்ரெய்ட் Broughton Strait பகுதியில் ஸ்டீபன் வைட் தனது ஜெட் ஸ்கீயில் பயணம் செய்தபோது Pacific white-sided dolphin வகை டால்ஃபின்கள் குழுவை நோக்கி வேகமாக சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
100 மீட்டர் பாதுகாப்பு தூரத்தை மீறி, சில அடிகள் முன்னேறி டால்பின்களை நெருங்கி சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர் டால்பின்களை அலைபேசி மூலம் படமெடுத்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் உடனடியாக அதிகாரிகளிடம் ப முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.