No products in the cart.
கனடாவில் 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண்ணின் உடல் பாகங்கள் மீட்பு
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், சிக்கமஸ் பகுதியில் இருந்து 2017ல் காணாமல் போன நிக்கோல் கிறிஸ்டல் பெல் என்பவர் உயிரிழந்த நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2025 மே 5 ஆம் திகதி, பிரிட்டிஷ் கொலம்பியாவின் சால்மன் ஆம் (Salmon Arm) பகுதியில் உள்ள ஒரு புறநகர் நிலத்தில் மனித உடற்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்பின், பிரிட்டிஷ் கொலம்பியா மரண விசாரணை சேவை அந்த உடற்கூறுகள் 31 வயதான நிக்கோல் பெல்லின் சடலம் என உறுதி செய்தது.
கனடாவில் 8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண்ணின் உடல் பாகங்கள் மீட்பு | Remains Of Bc Woman Who Disappeared
பெல் 2017 செப்டம்பரில் காணாமல் போனதிலிருந்தே, இந்த வழக்கை முக்கிய குற்றவியல் விசாரணை பிரிவு இந்த விசாரணைகளை முன்னெடுத்திரந்திருந்தது.
போலீசார் அதை சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகளில் நடந்த கொலை எனத் தீர்மானித்துள்ளனர்.