ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவசர அமர்வின் போது, மத்திய கிழக்கில் உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தை ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முன்மொழிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…