சினிமா

இத்தனை கோடி வசூலா!

கடந்த வாரம் வெளிவந்த திரைப்படங்களில் ஒன்று குபேரா. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

மேலும் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

ஆனால், தெலுங்கில் இப்படம் அமோக வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட்டாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை படக்குழு இணைந்து கொண்டாடியுள்ளனர்.

இந்த நிலையில், உலகளவில் குபேரா திரைப்படம் 4 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் கடந்த 4 நாட்களில் ரூபா 90 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூபா 15.5 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

அப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!

சினிமாஅப்துல் கலாமின் பயோபிக்கில் நடிக்கும் தனுஷ்!May 22, 2025 - 10:14 -0மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் இயக்குநர் ஓம்…