விளையாட்டு

தோல்வியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான சாதனை படைத்த இந்தியா!

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ஓட்டங்களும், இங்கிலாந்து 465 ஓட்டங்களும் எடுத்தன.

பின்னர் 6 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் துடுப்பாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 364 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 371 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ஓட்டங்களை பெற்று 05 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் அதிகபட்சமாக பென் டக்கெட் 149 ஓட்டங்ளை பெற்றுக்கொடுத்தார்.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

கடந்த 148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை தவிர வேறு எந்த அணியும் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்து தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…