விளையாட்டு

முதலாவது இன்னிங்ஸில் இலங்கை வலுவான நிலையில்

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 458 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக Pathum Nissanka 158 ஓட்டங்களையும், Dinesh Chandimal 93 ஓட்டங்களையும், Kusal Mendis 84 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Taijul Islam 05 விக்கெட்டுக்களையும், Nayeem Hasan 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

முன்னதாக பங்களாதேஷ் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 247 ஓட்டங்களை பெற்றது.

What's your reaction?

Related Posts

இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் இன்று

சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி நேற்றைய இரண்டாம்…