இலங்கை

பிரதமர் ஹரிணி மற்றும் இந்தோனேசிய தூதுவர் இடையிலான சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் Dewi Gustina Tobing ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலா பரிமாற்றங்களை விரிவுபடுத்துதல் குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டது.

இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…