விளையாட்டு

ஒலிம்பிக் 2028 : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் திகதி அறிவிப்பு

லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது. இந்த ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இறுதியாக, 1900ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், லோஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக்-2028இல் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 12ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் T20 வடிவத்தில் நடைபெறும்.

தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுக்காக அணிகளுக்கு இடையே போட்டி நடக்கும். பதக்கத்துக்கான போட்டிகள் ஜூலை 20 (பெண்கள்) மற்றும் 29 (ஆண்கள்) ஆகிய திகதிகளில் நடைபெறும்.

ஒவ்வொரு நாளும் இரு போட்டிகள் நடைபெறும். இந்தப் போட்டிகள் இந்திய நேரப்படி முறையே இரவு 9.30 மணிக்கும், காலை 7 மணிக்கும் நடைபெறும். ஐசிசி T20 தரவரிசையில் முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும்.

அனைத்துப் போட்டிகளும் லோஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொமோனாவின் ஃபேர்லேக்கில் கட்டப்பட்ட தற்காலிக மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…