No products in the cart.
சவுதியின் ‘தூங்கும் இளவரசர்’ காலமானார்!
சவுதி அரேபியாவின் இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் சவுத். தூங்கும் இளவரசர் என அழைக்கப்படும் இவர் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்து வந்த நிலையில், நேற்று (19) தனது 36 வயதில் காலமானார்.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ராணுவ பயிற்சிக்காக படித்து வந்த அவர், 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற கார் விபத்தில் பலத்த காயமடைந்த அவர் கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில், 20 ஆண்டுகளாக கோமாவிலேயே இருந்த இளவரசர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவருடைய மறைவை, அல் வாலீத்தின் தந்தையான இளவரசர் காலித் பின் தலால் அல் சவுத் உறுதி செய்துள்ளார். அவருடைய இறுதி சடங்குகள் இன்று (20) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில் அவருடைய தந்தை காத்திருந்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்துள்ளமை அந்நாட்டு மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.