இலங்கை

ஆசிரியர் பற்றாக்குறைக்கு இன்னும் தீர்வு வழங்கப்படவில்லை

ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (25) கிளிநொச்சி தெற்கு வலய கல்வி பணிமனைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தார்.

இதன் போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கிளிநொச்சி வலய கல்வி பணிமனை மற்றும் துணுக்காய் கல்வி வளையங்களில் பாரிய அளவிலான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது இதில் விசேடமாக விஞ்ஞானம் ஐ.சி.டி போன்ற பாடங்களுக்கு அதிகமாக பற்றாக்குறை நிலவுகின்றது.

இது மட்டுமின்றி சில பாடசாலைகள் நடத்த முடியாத அளவிலே ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதற்கு ஒர் தீர்வும் வழங்கப்படாத நிலைமை காணப்படுகின்றது. கிளிநொச்சி வலயத்தில் மாத்திரம் 75 பேர் இடமாற்றம் பெற்று சென்றுள்ளனர்.

ஆனால் 35 புதிய ஆசிரியர்களே திரும்பி வந்துள்ளனர். இதேபோன்ற நிலைமை முல்லைத்தீவு துணுக்காய் வலயத்திலும் காணப்படுகின்றது. அது மட்டுமின்றி கல்வியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான வளங்களும் பற்றாக்குறையாக காணப்படுகிறது.

வடமாகாண ஆளுநருக்கு இது தொடர்பான முழுமையான அதிகாரங்கள் காணப்படுகிறது. எனவே இதற்கான உரிய தீர்வினை அவர்களே எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கே கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…