இலங்கை

தெரண பட்ட விழாவில் பங்கேற்கும் த்ரீ விண்ட் பட்ட அணி!

தெரண – சிக்னல் கொழும்பு சர்வதேச பட்ட விழாவில் உலகின் முதலாம் இடத்தில் உள்ள ஸ்டண்ட் பட்ட அணியான சீனாவின் வுஹானைச் சேர்ந்த த்ரீ விண்ட் பட்ட அணியும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரண பட்ட விழா ஓகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.

தெரணவின் ஆதரவுடன் கொழும்பு சர்வதேச பட்ட விழா நடத்தப்படுவது இது 5 வது முறையாகும்.

கடந்த மூன்று ஆண்டுகளாக உலக செம்பியன்ஷிப் பட்ட போட்டியை த்ரீ விண்ட் பட்ட அணி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…