Washington Open Tennis: சம்பியன் பட்டம் வென்ற கனடா வீராங்கனை

வொஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ், ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய லேலா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சம்பியன் பட்டம் வென்று அசத்தினார். இந்தப் போட்டி 70 நிமிடங்கள் நடைபெற்றது.

நடப்பு தொடரில் முன்னணி வீராங்கனைகளான ஜெசிகா பெகுலா, எலினா ரிபாகினா ஆகியோரை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version