உலகம்

இஸ்லாமிய கல்வியை கட்டயாமாக்கிய இஸ்ரேல்!

இஸ்லாமிய கல்வியை கட்டயாமாக்கிய இஸ்ரேல்!
இஸ்ரேல் ராணுவம் மற்றும் உளவுத்துறையில் பணிபுரியும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியைக் (Islamic studies) கற்றுக்கொள்வதை கட்டாயமாக்கியுள்ளது.

அக்டோபர் 7, 2023 (ஹமாஸ் தாக்குதல்) அன்று, உளவுத்துறை தோல்வி, ஈரான் தொடர்பான விஷயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமை உள்ளிட்டவை இந்த முடிவுக்கு காரணமாகும்.

எனவே, எதிரி நாட்டின் மொழி மற்றும் மரபுகள் நாட்டின் பாதுகாப்பிற்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, இந்த முடிவை உளவுத்துறை (அமான்) தலைமை மேஜர் ஜெனரல் ஷ்லோமோ பைண்டர் எடுத்தார்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹவுதி மற்றும் ஈராக்கிய பேச்சுவழக்குகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மேலும் 50 சதவீத வீரர்கள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுக்கு அரபு மொழி கற்பிக்கப்படும். இதன் ஒரு பகுதியாக, காட் பயன்படுத்தப்படும். காட் என்பது ஒரு வகையான போதை தரும் தாவரமாகும். இது ஏமன் மற்றும் பிற அரபு பகுதிகளில் நுகரப்படுகிறது.

இதன் காரணமாக, அவர்களின் பேச்சு தெளிவின்மை கொண்டது. வீரர்களும் உளவுத்துறை அதிகாரிகளும் காட் எடுக்கும்போது, அவர்களின் பேச்சும் அரேபியர்களைப் போலவே ஒலிக்கிறது. அரபு மொழி மற்றும் இஸ்லாமிய கல்வியை கற்பிக்க ஒரு துறையும் அமைக்கப்படும் என வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…